
சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், சண்முகநாதன், சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, செங்கோட்டையனுக்கு பதிலாக புதியதாக நியமிக்கப்பட்ட புறநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்த சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி பேசியபோது, ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொறுப்பாளர்கள் அனைவரும் அவருடன் தான் இருப்போம்’ என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், எடப்பாடி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களை தொடர்ந்து, சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், எம்கே செல்வராஜ், சேலம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்


