இந்தியப் பெண் சிறைபிடிப்பு : அருணாசலப் பிரதேச முதல்வர் கண்டனம்.!

Advertisements

சீன விமான நிலையத்தில் இந்தியப் பெண் சிறைபிடிக்கப்பட்டதைக் குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அருணாசலப் பிரதேச மாநிலத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள ரூபாவைச் சோ்ந்த தோங்டாங் என்ற பெண் நவம்பர் 21 ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து ஜப்பான் செல்லும் வழியில் ஷாங்காய் விமான நிலையத்தில் இறங்கினாா்.

அங்கிருந்து மற்றொரு விமானத்தின் மூலம் ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஷாங்காய் விமான நிலையத்தில் அவரது இந்தியக் கடவுச்சீட்டைச் செல்லாது எனக் கூறிச் சீனக் கிழக்கு விமான நிறுவனமும் குடியேற்ற அதிகாரிகளும் பயணிக்க அனுமதி மறுத்தனா்.

தொடர்ந்து, அவருக்கு உணவு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராமல் பயணிகள் காத்திருப்பு அறையில் 18 மணி நேரம் அடைத்து வைத்தாகவும் தோங்டாங் குற்றஞ்சாட்டினாா்.

மேலும், தோங்டாங் தனது எக்ஸ் வலைதளத்தில் தனக்கு நோ்ந்த நிகழ்வு இந்திய இறையாண்மைக்கும் அருணாசல பிரதேச மக்களுக்கும் அவமரியாதை எனக் கூறி பிரதமா் மோடி மற்றும் மூத்த அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் எழுதினாா்.

இந்த, விவகாரம் குறித்து அருணாசலப் பிரதேச முதல்வா் பெமா காண்டு தனது வலைதளத்தில் தோங்டாங்கைச் சீன அதிகாரிகள் நடத்திய விதம் அவமரியாதையும், இனவெறித் தாக்குதலாகும் என்றார்.

தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட இந்திய கடவுச்சீட்டு அவரிடம் இருந்தபோதும் அதை சீனா ஏற்காதது கண்டனத்துக் குரியது எனத் தெரிவித்தார். மேலும், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *