
இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதார இருப்பு ஆபத்தில் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்று ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன என்றும் சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்பட முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை யடுத்து, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து, பாலஸ்தீன சுகாதார அமைச்சக புள்ளி விவரங்களின்படி கடந்த 2 ஆண்டுகளில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 69,000 க்கும் மேற்பட்டோர் உயிர் மாய்க்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.




