காசாவில் பட்டினியால் பலியாகும் உயிர்கள்..!

காசாவில் பசியும் பட்டினியும் நிலவுவது மனிதநேயத்தின் தோல்வியைக் காட்டுவதாக ஐக்கிய நாடுகள் அவைப் பொதுச்செயலர் அண்டொனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா நகரை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது. அங்குப் போதுமான உணவின்றிப் பல இலட்சம் பேர் பட்டினியில் வாடுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

இதை இஸ்ரேல் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் காசாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கொடும் பசியும் பட்டினியும் நிலவுவதாகவும், இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்றும் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலர் அண்டொனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *