ரெட்ட தல திரைப்படத்தில் அதிக ஆக்ஷன் நிறைந்த காட்சிகள்..!

Advertisements

ரெட்ட தல திரைப்படத்தில் அதிக ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் நன்றாக வந்துள்ளது என்று கதாநாயகன் நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை கிரிஷ் திருக்குமரன் இயக்கி சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். இதில், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படமானது டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்  இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதையடுத்து, படம் பற்றி நடிகர் அருண் விஜய் பேசியபோது, இந்தப் படத்தின் கதை தன்னை வெகுவாக கவர்ந்தது என்றும் ஆகையால நடிக்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அருண் விஜய், இப்படத்தின் முக்கிய தூணாக இருந்தது எடிட்டர் ஆண்டனி என்றும் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் நன்றாகவே வந்துள்ளது என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *