அசைன்மென்டை முடித்த செந்தில் பாலாஜி.? திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக புள்ளி!

Advertisements

அதிமுகவில் இருந்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான ஒரு முக்கிய புள்ளி திமுகவுக்கு செல்ல இருப்பதாகவும், அவரிடம் இரு திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் பொள்ளாச்சி ஜெயராமனிடம் தான் திமுகவினர் பேசி வந்ததாகவும், அடுத்த வாரம் இதுதொடர்பான அறிவிப்பு வர இருப்பதாக சொல்கின்றனர் திமுகவினர்.

ஆனால், அவர் திமுகவுக்கெல்லாம் செல்லமாட்டார் என்கின்றனர் கோவை மாவட்ட அதிமுகவினர். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு செல்லும் முக்கிய பிரமுகர்களின் பட்டியல் நீண்டு வருகிறது. திமுகவில் தற்போது இருக்கும் முக்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர் என பலர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா காலத்திலும், அதற்கு முன்னும், பின்னும் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு செல்வது சகஜம் தான். இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு திமுகவுக்கு செல்லும்அதிமுக பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில், செந்தில்பாலாஜி, சேகர்பாபு, முத்துச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், தங்க தமிழ்ச்செல்வன் என பலரைச் சொல்லலாம். சமீபத்தில் கூட அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

சேர்ந்த புதிதிலேயே அவர்களுக்கு பதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமி மீது சில சீனியர் அதிமுகவினர் மிகுந்த அதிருப்தியில் இருக்கும் நிலையில் அவர்களில் முக்கிய புள்ளிகளை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுடன் சில திமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஈரோட்டில் அதிமுகவின் முக்கிய முகங்களாக இருந்த தோப்பு வெங்கடாசலம் கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல அமைச்சர் முத்துச்சாமியும் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர் தான்.

இப்படி கொங்கு மண்டலத்தில் திமுக வலுவாக, அதிமுக புள்ளிகளை இழுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜி பல அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கோவையின் மிக முக்கிய அதிமுக புள்ளியான பொள்ளாச்சி ஜெயராமனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படும் நிலையில் அவர் திமுகவில் இணையலாம் என உடன்பிறக்கிளிடையே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

திமுகவுக்கு வந்தால் மாவட்ட செயலாளர் பதவி, அடுத்த தேர்தலில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டிருக்கும் நிலையில் சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த நிலையில் திமுகவின் ஆஃபர்களுக்கு தோப்பு வெங்கடாசலம் ஒப்புக்கொண்டு விட்டதாகவும், திமுகவில் இணைய யோசித்து வருவதாகவும் கடந்த ஒரு வார காலமாகவே கோவையில் பேசப்படுகிறது.

அதே நேரத்தில் ஜெயராமன் திமுகவில் இணைய போகிறார் என்ற தகவல் வெறும் வதந்தி தான் எனவும், அவர் அதிமுகவிலேயே தொடர்ந்து பயணிப்பார் என அதிமுகவினர் உறுதியாக சொல்கின்றனர். எது உண்மை என்பது அடுத்த வாரம் தெரியும் என்கின்றனர் கோவை அரசியல் புள்ளிகள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *