
இந்தியாவில் கொடி நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 07-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும் பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும்.
கொடி நாளை இந்திய அரசும், இந்திய மாநில அரசுகளும் 1949ம் ஆண்டிலிருந்து கடைபிடித்து வருகின்றன. படை வீரர்களின் நலனை காக்கவே கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது.
நாட்டு மக்களுக்காக உழைக்கும் படை வீரர்களின் தியாகங்களை இந்த கொடி நாளில் அனைவரும் போற்றி வருகின்றோம். அதே நேரத்தில், அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இந்த நாளில் நேரடியாக தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கிய பலர் டிவிட்டரில் பகிர்ந்து வருவதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். நம் நாட்டினை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7- ம் தேதி படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.
1949 ஆம் ஆண்டில் இருந்து இந்த படை வீரர் கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. வெயில், பனி, மழை என பாராமல் எல்லைகளையும், தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து மக்களைக் காப்பதில் அரிய சேவையாற்றி வருகின்றனர். பரந்த கடல் பகுதிகளையும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் வானுலக பரப்பை தங்கள் வசம் வைத்திருக்கும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களை பேணிக் காப்பது நமது சமூகக் கடமையாகும்.
கொடிநாளில் விற்கப்படும் கொடி காசு மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றனர். கொடி நாளில் படை விரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

