
புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தைப் பின்தொடர்வதில் பாஜக – பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று இரவு மணவெளி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தவளக்குப்பம் – பூராணங்குப்பம் சந்திப்பு அருகில் முதலமைச்சரின் பிரச்சார வாகனத்தைப் பின்தொடர்வதில் பாஜக – பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு கட்சி தொண்டர்களையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தும், அவர்கள் சமாதானம் ஆகாமல் பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டதுடன், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் முகம் சுழித்தபடி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே என்ஆர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் முதல்வருக்காக என்ஆர் காங்கிரஸ் கொடியுடன் காத்துக் கொண்டிருந்தனர், அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரெட்டியார் தெருவைச் சேர்ந்த மாநில மகளீரணி தலைவி ஹேமமாலினி பாஜக கொடி மற்றும் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தனர்,
அப்போது என்ஆர் காங்கிரஸ் அதரவாளர் ஒருவர் இந்த இடத்தில் பாஜக கொடியுடன் ஏன் வந்தாய்? நாங்ஓள் என்ஆர் ஐயா-விற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம், நீ பாஜக கொடியுடன் கட்சி பனனறதா இருந்தா உன்னோட ஏரியாவில் போய்ப் பன்னுஎன்று கூற அங்கு இரு தரப்பினருக்கிமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது அஙனகு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் மரித்துவிட்டு சமாதானம் செய்தனர், அதனைத் தொடர்ந்து முதல்வர்்ரங்கசாமி காரில் வந்தார் அவருக்கு ஆராத்தி எடுத்து வரவேற்றனர்,
சபாநாயகர் தொகுதியான இந்த இடத்தில் முதன் முதவில் சபாநாயகர் செல்வம் பாஜக கட்சியின் ஆரம்பத்தில் துப்புரவு பணி மேற்கொண்டபோது ஏம்பலம் செல்வமாக ஊருக்கல் எப்போது வேண்டுமானாலும் வரலாம், ஆனால் பாஜக கொடியுடன் இங்கே ஒரு போதும் வரக் கூடாது என விரட்டியடித்து சம்பவம் குறிப்பிடத்தக்கது.



