
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். நீங்கள் முழு மனமகிழ்ச்சியோடும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடும் தொடர்ந்து பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்கான வலிமையைப் பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



