காவலர்கள் டாஸ்மாக் சென்றபோது பரபரப்பு..!

Advertisements
பாளையங்கோட்டையில் இருந்து வேலூர் மத்தியச் சிறைக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கைதி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சன்னல் கண்ணாடியை உடைத்துக் காவலர்கள் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு காவல் துறையினர் வாகனத்தைச் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து அருகே இருந்த அரசு மதுக் கடைக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் மீண்டும் திரும்பிவந்த போது, வாகனத்தில் இருந்த சிறைக் கைதி சன்னல் கண்ணாடியை உடைத்து பொதுமக்களிடம் காவல்துறையினர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் இதனால் தலையில் பலத்த காயமடைந்து உள்ளதாகவும் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்குக் குவிந்தனர். அவர் தான் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பந்தா பாண்டி என்றும், தன்னைச் சிறு குற்றத்தில் கைது செய்த பின்னர் மேலும் பல்வேறு வழக்குகளில் சேர்த்துப் பிணையில் எடுக்க விடாமல் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு அடித்துத் துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் காவல்துறையினர் உடனடியாக அங்கிருந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *