நொடிப்பொழுதில் உயிர் தப்பினர்..!

புதுச்சேரியில் மேம்பாலத்தில் அதிவேகமாகச் சென்ற வேன், தடுப்பில் மோதாமல் இருக்கச் சட்டெனத் திரும்பியதால் கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி தேங்காய்த்திட்டைச் சேர்ந்த வெங்கடேசன் தனியார் மருந்துக் கம்பெனியின் பிரதிநிதி. இவரது மனைவி சுசித்ராவின் வளைகாப்புக்காகக் கோயமுத்தூரில் இருந்து கைக்குழந்தைகளுடன் உறவினர்கள் புதுச்சேரிக்கு வந்தனர்.
விழா முடிந்து திரும்பிச் செல்லும் பொழுது விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திருவண்டார்கோவில் மேம்பாலத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வேன் கவிழ்ந்தது.
நல்வாய்ப்பாகச் சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்துக் காவல்துறையினர் ஓட்டுநர் காமேஸ்வரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர். வேன் சாலையில் கவிழ்ந்தது குறித்த கண்காணிப்புக் கேமரா பதிவு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *