Tiruvallur rape suspect : சிறுமி பாலியல் வன்கொடுமை-வட மாநில வாலிபர் அதிரடியாக கைது!

Advertisements

 

Video Link :👇

காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பதற்றம் | Gem TV

ஆரம்பாக்கம் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில  வாலிபரைக் காவல்துறையினர்  அதிரடியாகக் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வட மாநிலத்தைச் சேர்நத வாலிபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கடந்த 12 ஆம் தேதி  8 வயது சிறுமி பள்ளியிலிருந்து தனது பாட்டி வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தபோது வடமாநில வாலிபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பித்துள்ளார். இதனைக் கண்டு  அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் குற்றவாளியை 15 தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் சூலூர்ப்பேட்டை ரயில் நிலையத்தில்  பாலியல் பலாத்காரம் செய்த நபரின் முக ஜாடையுடன் இருந்த நபரைப் பிடித்தனர். அவருடைய புகைப்படம் காட்டி சிறுமி அடையாளம் காட்டி உறுதி படுத்தினார். இந்நிலையில் ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *