Jagan Murthy:பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்தால்அதிமுக ஆட்சியைப் பிடிக்கலாம்!

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்தால், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கலாமெனக் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள ஜெகன் மூர்த்தி, கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அதிமுக குறித்து மேலும் அவர் கூறுகையில், ” தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாகப் பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது.

தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பரிசீலனை செய்ய வேண்டும்.அவ்வாறு செய்தால், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கலாம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *