
அரக்கோணம் ஐ என் எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 104 வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ என் எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 18 இளம் கடற்படை அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்பட்டது. அதிகாரிகள் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்தனர்.
. இதைதொடர்ந்து 18 அதிகாரிகளும் ஹெலிகாப்டர் பைலட்டுகளாக தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு ஐ என் எஸ் ராஜாளி அணிவகுப்பு மைதானத்தில் 104 வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தாகர் கலந்து கொண்டு அணிவகுப்பு வீரர்களை பார்வையிட்டார்.
இதையடுத்து பயிற்சி பெற்ற 18 கடற்படை பைலட் களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.


