வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பாக, 20,000 மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்க, தமிழக அரசு ஒப்புதல்

வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பாக, 20,000 மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன உயிரினங்கள் பாதுகாப்பு, காட்டுத்தீ தடுப்பு, மனித – வன உயிரின மோதல் தடுப்பு என, பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த களப் பணிகளில்   பள்ளி, கல்லுாரி மாணவர்களை தயார்படுத்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வன உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் கணக்கெடுப்பு, காட்டுத்தீ மேலாண்மை, மனித வன உயிரின மோதல் தடுப்பு போன்ற பணிகளுக்கும், மாணவர்களை தயார்படுத்த திட்டமிடபட்டுள்ளது.

இதற்காக, 20,000 மாணவர்களுக்கு குறுகியகால பயிற்சி அளித்து, ‘இளம் இயற்கை காவலர்கள்’ என, சான்றிதழ் அளிக்கப்படும் என தெரிவிக்கபப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு, 3 கோடி ரூபாய் ஒதுக்கி இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *