
சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது…
பெங்களூரு: நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இதையடுத்து, விக்ரம் லேண்டரிலிருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது. தற்போது ரோவர் முழுமையாகச் சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது. ChaSTE, RAMBHA-LP, ILSA கருவிகள்மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமியில் பெறப்பட்டதாகவும் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22-ந்தேதி செயல்பட தொடங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (DFSAR) கருவி, சந்திரயான்-3 லேண்டரை புகைப்படம் எடுத்ததாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
Chandrayaan-3 Mission:
Here is an image of the Chandrayaan-3 Lander taken by the Dual-frequency Synthetic Aperture Radar (DFSAR) instrument onboard the Chandrayaan-2 Orbiter on September 6, 2023.More about the instrument: https://t.co/TrQU5V6NOq pic.twitter.com/ofMjCYQeso
— ISRO (@isro) September 9, 2023



