K. Ponmudy Corruption Case: சொத்துக்களை மீண்டும் முடக்க கூடாது!

Advertisements

சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை, மீண்டும் முடக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவாக இருந்தாலும் காலம் தாழ்ந்து தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டிசம்பர் 22.ஆம் தேதி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

அதுமட்டுமல்லாது கணவன் மனைவி இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்து தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை  மேல்முறையீட்டு வழக்கினைத்   தொடர்ந்தது. அந்த மனு மீது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் நீண்ட காலம் ஆகிவிட்டதால் தலையிட முடியாது என்று கூறி  லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *