ஜப்பானில் மகளிர்க்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, வங்காள தேச அணிகள் இன்று மோதுகின்றன்.
ஜப்பானின் நிஷின் நகரில் மகளிர்க்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், இந்தியா, வங்காள தேச அணிகள் இன்று மோதுகின்றன். இப்போட்டியில், நிகர் சுல்தானா தலைமையிலான வங்காள தேச வீராங்கனைகளும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் யார் வெல்வார் என கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



