தேர்தல் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா அண்ணாமலை?

Advertisements
தமிழக பாஜக அரசியல் நிலவரத்தில் மீண்டும் உள் குத்து விவகாரம் தலை தூக்கி விளையாடுகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து முழுமையாக விலகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.தற்பொழுது டெல்லி மேலிடம் வரை அண்ணாமலை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அவர் கட்சியிலிருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் தமிழக பாஜக தொண்டர்கள் மிகவும் பரபரப்பு அடைந்திருக்கிறார்கள்
 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த பதவியில் இருந்து விலகிய காலம் முதலே கட்சிக்குள் உள்குத்து சண்டைகள் நிலவி வருகின்றன. தொடக்க காலத்தில் இருந்தே நைனார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் ஒத்துப் போகவில்லை.இதன் நிமித்தமாக தனது கருத்து வேறுபாட்டை டெல்லி பாஜக மேல் இடத்திற்கு அண்ணாமலை பல்வேறு வழிகளில் தெரிவித்து வந்தார் இருந்தபோதிலும் அவ்வப்போது அண்ணாமலையை டெல்லி பாஜக மேல் இடம் அழைத்து சமரசம் செய்து வைத்தது.
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கு தமிழக பாஜக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் காரைக்குடி உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் இதன் பின்னணியில் காரைக்குடியில் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் தனக்கு தரப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
தனது தந்தைக்கு தற்பொழுது மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை நடைபெறுவதாகவும் எனவே இந்த சிகிச்சையின் போது உடன் இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாலும் தற்போது இந்த பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் கட்சி மேல் இடத்துக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். இதுவல்லாமல் கட்சி தொடர்பாக எனக்கு எந்த விதமான பணியை வேண்டுமானாலும் கொடுங்கள் ஏதோ ஒரு தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு மட்டும் எனக்கு அனுமதித்தால் கூட அந்த பணியை நான் செய்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் உண்மையில் இதன் பின்னணியில் வேறு பல விஷயங்கள் நடைபெற்றதாக சொல்கிறார்கள். ஏற்கனவே சமீபத்தில் டெல்லி மேல் இடத்தில் இருந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது அண்ணாமலை அதனை புறக்கணித்து இருக்கிறார் அப்பொழுது தனக்கு ஏராளமான திருமண நிகழ்வுகள் இருக்கின்றன அதில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது என பதில் சொல்லி இருக்கிறார். இதேபோல் நைனார் நாகேந்திரன் தரப்பிலும் அண்ணாமலையை பல கட்டங்களில் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு அண்ணாமலை அழைக்கப்படவில்லை என்பதும் முக்கிய குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது.இதனிடையே அண்ணாமலையை பொருத்தவரையில் தமிழ்நாடு முழுவதும் தன்னை தேர்தல் பொறுப்பாளராக நியமிப்பார்கள் என எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதே வேலையில் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி பழனிச்சாமியும் தனியாக சந்தித்து பேசிய போது அண்ணாமலையை தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தால் பின்னடைவு தான் ஏற்படும் என்று பேசியிருக்கிறார்கள் அதன் அடிப்படையில் தான் ஆறு தொகுதிகளுக்கு மட்டும் அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் தன்னை தேர்தல் பொறுப்பாளராக நியமிப்பார்கள் என எதிர்பார்த்த  நிலையில் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடக்கியதால் அண்ணாமலை கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார். இதன் மூலம் தனது எதிர்ப்பை டெல்லி மேல் இடத்திற்கு காட்டுவதற்காக தற்பொழுது அந்த பொறுப்பிலிருந்து அவர் விலகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பாஜக மீது மிகுந்த கோபத்தில் இருக்கும் அண்ணாமலை வேறு தனி கட்சி தொடங்கவோ அல்லது யாருடனும் கூட்டணி சேரவும் முயற்சிகள் எதுவும் செய்யவில்லை என்பதும் முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது
எனவே அண்ணாமலையை பொருத்தவரையில் தமிழக அரசியலில் முக்கியமான பதவி தரப்படுமானால் அவர் முழுமையான தேர்தல் பணி செய்வார் இல்லை என்றால் ஒப்புக்குசப்பாக ஏதோ சில கூட்டங்களில் பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டு பாஜகவில் இருந்து விலகி இருப்பார் என்று பேசப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் பணிகளில் இருந்து அண்ணாமலை பின் வாங்கினால் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் பின்வாங்குவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது .
எனவே இதுகுறித்து அண்ணாமலையை மீண்டும் சமரசப்படுத்தலாம் என டெல்லி பாஜக மேலிடம் கருதுகிறது. எனவே தற்போதைய சூழலிலிருந்து வேறு ஏதாவது ஒரு முக்கிய பதவி அண்ணாமலைக்கு தரப்படலாம் என்றும் பேச்சு நிலவுகிறது. இது தேர்தல் சமயம் என்பதால் அண்ணாமலையை இழப்பதற்கு டெல்லி பாஜக மேலிடம் தயாராக இல்லை என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *