ISRO’s Exposat Satellite: முதல் தகவல்களை அனுப்பிய எக்ஸ்போ சாட்!

Advertisements

விண்மீன் வெடிப்புகுறித்த தகவல்களை எக்ஸ்போ சாட் செயற்கைகோள் சேகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் சூப்பர் நோவா உமிழ்வு எனும் விண்மீன் கூட்டம் வெடிக்கும் தரவுகளைச் சேகரித்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

பெங்களூரு: கடந்த 1-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், `எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

இந்தச் செயற்கைக்கோள் பூமியிலிருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இதுதவிர காலநிலைபற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்’ என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த நிலையில் விண்மீன் வெடிப்புகுறித்த தகவல்களை எக்ஸ்போ சாட் செயற்கைகோள் சேகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் சூப்பர் நோவா உமிழ்வு எனும் விண்மீன் கூட்டம் வெடிக்கும் தரவுகளைச் சேகரித்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. காசியோப்பியா எ என்ற விண்மீன் கூட்டத்தை இந்தச் செயற்கை கோள் எடுத்துள்ளது. இது சுமார் 11 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது சூரிய குடும்பத்திற்கு வெளியே இஸ்ரோ சேகரித்த முதல் தரவுகள் ஆகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *