
பெருந்தலைவர் காமராஜர் குறித்து உண்மைக்குப் புறம்பான அவதூறுகளைத் திமுக தலைவர்கள் பேசியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுமா? தனித்து நின்று போட்டியிடுமா? என்று அண்ணாமலை வினவியுள்ளார்.
காமராஜர் ஏசி அறை இல்லாமல் உறங்க மாட்டார் என்றும், அவர் தங்கும் விடுதியில் எல்லாம் தேவையான மின்வசதியைக் கருணாநிதி செய்து கொடுத்ததாகவும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியிருந்தார். இது குறித்துத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, காமராஜர் குறித்து உண்மைக்குப் புறம்பான பொய்யான அவதூறுகளைத் திமுக தலைவர்கள் பேசியுள்ள நிலையில் காங்கிரஸ் இன்னும் அமைதி காப்பது ஏன்? என்று வினவினார். இதைக் கண்டித்துத் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வருமா? என்றும், தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டுக் கண்ணியத்தைக் காக்குமா? என்றும் அண்ணாமலை வினவியுள்ளார்.




