திமுக பொன்முடிக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்..! சைவமா? வைணவமா?

Advertisements

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சென்னையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

அந்த சர்ச்சைப் பேச்சை இதோ சொல்கிறேன். விலைமாதுவின் ஒரு வீட்டுக்கு ஒருத்தன் போறான். போகும்போது அந்த அம்மா கேட்குது, “நீங்க சைவமா? வைணவமா?” அவனுக்கு ஒன்னும் புரியல. “என்னடா இது? பணம் ஒரு ஐஞ்சோ, பத்தோ கேட்டா பரவாயில்ல. இது என்னடா இப்படி கேக்குது?” மறுபடியும் கேக்குது, “நீங்க சைவமா? வைணவமா?” அப்பவும் இவனுக்கு ஒன்னும் புரியல. அப்புறமா அந்த அம்மா சொல்லுச்சாம். அதுக்கப்புறம் பொன்முடி சொன்ன அந்த வார்த்தையை அந்த வீடியோ பார்த்து நீங்க தெரிஞ்சுக்கோங்க.

அவரது இப்பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அவர் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். வெறுப்புப் பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்தப் புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியைத் தண்டிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுனில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 2 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பொன்முடி மீதான வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரபாண்டியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி ஆஜராகவில்லை. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பொன்முடியை செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததைக் கண்டித்து, பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொன்முடி அவர்கள் வாய் திறந்தாலே பல சர்ச்சைப் பேச்சுகள் கிளம்பும். ஒரு உதாரணத்தைப் பார்த்துலாம். ஓசி பஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் முதல் ஆள் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள்தான்.“எது? உங்க அப்பன் வீட்டு காசா கேட்கிறோம்?” என்று உதயநிதி அவர்கள் சொன்னது போல, அன்று இவர் பேசிய பேச்சுக்கு தமிழக மக்கள் ரத்தம் கொதித்துப் போய், நாறு நாறாக பொன்முடியை கிளித்து தொங்கவிட்டார்கள். என்று மக்கள், “வரிப்பணம் நீங்கள் ஒன்னும் எங்களுக்கு ஓசியாகக் கொடுக்கவில்லை.”

ஆக, தன் வாயாலே சூனியம் வைத்துக்கொண்ட பொன்முடி கைது செய்யப்படுவதற்கு உங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *