
எளிமையின் சிகரமாக வாழ்ந்த மாபெரும் தலைவனான காமராஜருக்கு ஏசி வைத்துக் கொடுத்தோம் என்று திருச்சி சிவா கூறியதற்கு பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜனநாயகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதியைப் பார்த்து சொன்னார் என்று திருச்சி சிவா கூறியது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இன்று பெருந்தலைவர் காமராஜ் சேர்த்து வைத்த “சொத்துக்களைத்” தேடித் தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அவர் மீதான பழிச் “சொற்களைச்” சரியாக எதிர்க்கவில்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் திமுக தொண்டர்களை ஸ்டாலின் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை நிந்தனை செய்யும் திமுகவுடன் ஓட்டுக்காகக் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டு இருப்பதாகத் தமிழிசை தெரிவித்துள்ளார்.




