Anna Nagar: ஆபாச வீடியோக்களை அனுப்பி பணம் சம்பாதித்த வாலிபர்!

Advertisements

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கடந்த 23ம்தேதி ஆன்லைன் மூலம் வந்த புகாரில், ‘சிறுமிகளின் ஆபாச வீடியோக்களின் லிங்க்கை செல்போன் மூலம் அனுப்பி ஒரு வீடியோ 1000 முதல் 2,000 ரூபாய் வரை மகேந்திரன் என்பவர் விற்பனை செய்து வருவதாகவும், வீடியோக்களை விற்பனை செய்வதற்கு செல்போன் மூலம் ஒரு குரூப் ஏற்பாடு செய்து அந்த குரூப்பில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களின் லிங்க்கை அனுப்பும்போது, குரூப்பில் இருப்பவர்கள் சிறுமியின் ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு 12, 14, 9 வயது சிறுமிகளின் வீடியோக்களை அனுப்பும்படி கூறி கூகுள் பே மூலம் பணம் அனுப்புகிறார்கள்.

எனவே, சமூகவிரோத செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் புகாரையடுத்து இன்ஸ்பெக்டர் அமுதா, மறைமுகமாக தீவிர விசாரணை நடத்த மாறுவேடத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை அனுப்பி பணம் பெற்றுக்கொள்வது ரகசியவிசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமிகளின் ஆபாச படங்களை செல்போனில் அனுப்பிய நபர் இருக்கும் இடத்தை செல்போன் டவர் மூலம் போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (38) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரது செல்போனை சோதனை செய்தபோது, சிறுமியின் ஆபாச வீடியோக்கள் எதுவும் இல்லை.

எனக்கு ஒன்றும் தெரியாது என்றும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை யாருக்கும் விற்பனை செய்ய வில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், சைபர் கிரைம் போலீசார் சோதனைக்கு செல்போனை அனுப்பி வைத்தனர். அவர்கள் சோதனை செய்தபோது 50க்கும் மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் செல்போனில் இருந்தது தெரியவந்தது. தீவிர விசாரணையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர், மகேந்திரனை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை 1000 முதல் 2000 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளார். வீடியோக்களை அனுப்ப செல்போன் மூலம் குரூப் ஏற்படுத்தி அந்த குரூப்பில் நிறைய பேரை சேர்த்து கொண்டு சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை அனுப்பி கூகுள் பே மூலம் பணம் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மகேந்திரனை சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மகேந்திரன் இடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இன்னும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? என்பதை சோதனை செய்ய சைபர் கிரைம் போலீசாரிடம் செல்போனை ஒப்படைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுமியின் ஆபாச வீடியோக்கள் எப்படி இவருக்கு கிடைக்கிறது, இணையதளம் மூலம் ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்கிறாரா? இவருக்கு பின்னால் சமூகவிரோத கும்பல் உள்ளதா? என பல கோணங்களில் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் மாறுவேடத்தில் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்த வாலிபரை கைது செய்த போலீஸ்காரர்களை உயரதிகாரிகள் பாராட்டினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை செல்போன் மூலம் அனுப்பி 1000 முதல் 2000 வரை கூகுள்பே மூலம் பணம் கேட்பதாக டெல்லியில் இருந்து ஆன்லைன் மூலம் சென்னை பெருநகர காவல்நிலையத்துக்கு புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து ரகசியமாக விசாரணை செய்ததில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை செல்போன் மூலம் அனுப்பி பணம் சம்பாதித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து மாதவரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரை கைது செய்து அவரது செல்போனை சைபர் க்ரைம் போலீசார் மூலம் சோதனை செய்ததில் முதல்கட்டமாக 50க்கும் மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தது.

சிறுமிகளின் ஆபாச வீடியோ லிங்கை குரூப்புக்கு அனுப்பும்படி மெசேஜ்கள் நிறைய வருகிறது. மகேந்திரன் செல்போனை மீண்டும் சோதனை செய்ய சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்துள் ளோம். தீவிர சோதனைக்கு பிறகுதான் சிறுமிகளின் வீடியோக்கள் எந்தெந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் அனுப்பி உள்ளனர் என்பது தெரியவரும்” என்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *