Murder: உறவினரைக் கொலை செய்து நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி கைது!

Advertisements

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த உறவினரைக் கொடூரமாகத் துடிதுடிக்கக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய  வடமாநில கள்ளக்காதல் ஜோடியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் புஜக்கர் (38) என்பவர் வீட்டில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது உறவினரான பெண் சோனியா (33) என்பவர் மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோகன் புஜக்கர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மோகன் புஜக்கரை யாரோ கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றிச் சோனியா மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த சுசாந்தா பர்மன் (44) ஆகிய 2 பேரைப் பிடித்துப் போலீசாரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

மோகன் புஜக்கர் இங்குத் தங்கி வேலை செய்து வந்த நிலையில் சோனியாவிற்கும், சுசாந்தா பர்மன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சோனியாவை பார்க்கச் சுசாந்தாபர்மன் அடிக்கடி வீட்டிற்கு சென்றதால் மோகன் புஜக்கர் அவரைக் கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் சுசாந்தா பர்மன் சோனியா வீட்டிற்கு சென்றபோது அங்கு வந்த மோகன் புஜக்கர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுசாந்தாபர்மன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகன் புஜக்கர் மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். போலீசில் தாம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மோகன் புஜக்கர் நாடகமாடியது அம்பலமானது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *