நடிகர் போஸ் வெங்கட்டுக்கு திமுகவில் பதவி..! 

Advertisements
பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டிஒலி . சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் . நடிகர் போஸ் வெங்கட். இவர் தொலைக்காட்சி மட்டுமல்லாது சிவாஜி, தலைநகரம் ,விடுதலை, சிங்கம் 2 என பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் .
ஆணவ கொலை குறித்து கன்னி மாடம் என்ற பெயரில் ஒரு படத்தையும் இயக்கி இருக்கிறார் . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த போஸ் வெங்கட் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
 போஸ் வெங்கட் ஏற்கனவே திமுகவைச் சேர்ந்தவர் அந்த கட்சி சார்பாக தீவிரமாக பணியாற்றி வருகிறார் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரையும் மேற்கொண்டார் .
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவும் தாக்கல் செய்திருந்தார் எனினும் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது தவிர கட்சியில் போஸ் வெங்கட்டுக்கு முக்கியமான பொறுப்பு எதுவும் தரப்படவில்லை .
இந்த நிலையில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவராக போஸ் வெங்கட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவராக முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் பணியாற்றி வந்தார்.  தற்பொழுது அவர் கல்வியாளர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் . எனவே அவருக்கு பதிலாக சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவராக தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *