
“3” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ராக் ஸ்டார் அனிருத்.
இவர் அறிமுகம் ஆகிய போது இவர் இந்த அளவுக்கு உயர போகிறார், பிஸியாக போகிறார் என்கிற எண்ணம் அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கூட இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், எத்தனை ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் ராஜா நடை போட்டு வந்தாலும், அனிருத் தான் இன்று தமிழ் சினிமாவின் பரபரப்பான மற்றும் மோஸ்ட் வான்டட் கம்போசர். 2012 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் ஆரம்பமான இவரின் பயணம் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வியாபித்து பல எல்லைகளை தொட்டு வருகிறது.

2023 ஆம் ஆண்டில் இவரின் கலை பயணத்தை இன்னும் இன்னும் உயர வைத்த படங்கள் இவருக்கு அமைந்தன. ஆம், அது ஜெயிலர், லியோ, ஜவான் ஆகிய மூன்று முக்கிய படங்களாகும். வெறும் மூன்று படங்கள் என்று நினைக்கலாம், ஆனால் இவை மூன்று இவரின் இசை பங்களிப்பால் மட்டுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.
இதற்கு தலைகீழாக 2024 ஆம் ஆண்டு அனிருத் இசையில் வரப்போகும் படங்கள் தான் தற்போது பேசுபொருள் ஆகியுள்ளன. ஆம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக உள்ளார் ராக் ஸ்டார் அனிருத்.
வேட்டையன், தலைவர் 171, விடாமுயற்சி, SK23, LIC, தேவாரா, இந்தியன் 2, VD12, விக்ரம் 3, ஆகாஷ் அதர்வா, கவினின் 4 வது படம், நெல்சன் உதவி இயக்குனரின் படம் என சுமார் 12 படங்கள் வரை இவர் இசையில் வெளியாக உள்ளன. ஆம், இளையராஜா, ரஹ்மான் கூட இந்த அளவுக்கு பிஸி இல்லை எனலாம். யார் அவரை தேடி வந்தாலும் 2024 கால் ஷீட்டில் இடம் இல்லை எனக் கூறி அனுப்பி விடுகிறார் என திரை வட்டாரங்கள் கூறுகின்றனர். அதோடு, அனிருத் ஒரு படத்துக்கு 10 கோடிகள் வரை சம்பளமாக வாங்குகிறார் எனவும் தெரிய வந்துள்ளது.



