Cyclone Michaung: 1 கோடி ரூபாய் வரை நிவாரணம்!

Advertisements

மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் வரை நிவாரண பொருட்கள் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வழங்கியதாக மாநில தலைவர்,MH.ஜவாஹூருல்லா தெரிவித்தார்.

வடசென்னை  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின்  சார்பில்  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட  500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் MH.ஜவாஹூருல்லா எம்எல்ஏ மக்களுக்கு வழங்கினார்.

சென்னை,திருவொற்றியூர் டி.கே. எஸ்.கோபால் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின், திருவொற்றியூர் கிளை கழக அலுவலகம்  திறப்பு விழா மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 500 பேர்களுக்கு பாய், அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை  நிவாரண உதவி வழங்கினர்.

B.சுலைமான் கிளைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநிலத் தலைவர்MH.ஜவாஹூருல்லா எம்எல்ஏ கலந்து கொண்டு தமுமுக கொடியினை ஏற்றி வைத்து  நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் மாநில செயலாளர் முஸ்தபா, மாநில அமைப்பு செயலாளர் சேக் முகமது அலி, மாநில தலைமைப் பிரதிநிதி சிராஜுதீன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய  மாநில தலைவர்,MH.ஜவாஹூருல்லா  மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் வரை நிவாரண பொருட்கள் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வழங்கியதாக தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *