Thoothukudi : மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து EPS அறிக்கை.!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தனது சமூக வலைத்தளப்பதிவில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடியில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உயிர்மாய்க்கம் செய்யப்பட்ட செய்திகேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் காவல்துறை செயல்பட்டுள்ளது என்றும் இந்த வெட்கக்கேடான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

பாலியல் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். இதையடுத்து, குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *