பிரதமரை கண்டதும் முதல்வரின் பதற்றம் நன்றாகவே தெரிகின்றது – தமிழசை பேச்சு.!

Advertisements

தமிழ்நாட்டிற்குப் பிரதமர் வந்தவுடனேயே முதல்வர் அடையும் பதற்றம் நன்றாகவே தெரிகின்றது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

 பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழசை சௌந்தராஜன் தனது சமூக வலைத்தளப் பதிவில், பிரதமர் டபுள் இன்ஜின் கவர்ன்மென்ட்டை வைத்துக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக கவர்ன்மென்ட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் ட்ரபிள் இன்ஜின் கவர்ன்மென்ட் ஆக போதை, கடன், பாதுகாப்பின்மை போன்றவற்றை ஏற்படுத்தி ஓட்டிக்கொண்டிருப்பதாகவும், நல்ல டபுள் இன்ஜின் கவர்மெண்ட் கொண்டுவர வேண்டுமென்றால் அதை டப்பா இஞ்சின் என்று விமர்சிப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து, நீங்கள் தான் தப்பான இன்ஜினை வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், தமிழ்நாட்டிற்குப் பிரதமர் வந்தவுடனேயே முதல்வர் அடையும் பதற்றம் நன்றாகவே  தெரிகின்றது என்றும் விமர்சித்தார். மேலும், பிரதமருக்கு 10 கேள்விகள் கேட்கும் முதல்வர் தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தொடர்ந்து, தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *