Taliban : தலிபான் அரசை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பு! 

Advertisements

தலிபான் அரசை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது என்றும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியது  என்றும்  ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக  ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான செயல், பல்வேறு துறைகளில் நமது நாடுகளுக்கு இடையே உற்பத்தி ரீதியான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கையின் மூலம், 2021ல் தலிபான் தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாரியது. மாஸ்கோவில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்வில் ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை சந்தித்தார்.
காபூலில் உள்ள தலிபான் அதிகாரிகள் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். மேலும் இது உறவுகளை வலுப்படுத்த உதவும் என்றும் இது எங்கள் உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்’ என்று தலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் கூறினார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *