
திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய உறுதிமொழியை நிறைவேற்றக் கோரிச் சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணித் திட்டம் அலுவலகம் முன்பு அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆறாம் நாளாகப் போராட்டம் நடத்தினர்.
திமுக தேர்தல் அறிக்கையில் 313ஆவது உறுதிமொழியான ‘காலமுறை ஊதியம்’ வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அங்கன்வாடிப் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்திச் சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணித் திட்ட அலுவலகம் முன் ஆறாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறு நாட்களாகப் போராட்டம் நடத்தியும் எந்தவொரு அரசு அதிகாரியும் இதுவரை நேரில் வந்து பேச்சு நடத்தவில்லை என்றும், தங்களை அலட்சியப்படுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


