கைதட்டலுக்கான அரசியல் செய்கிறார் விஜய்..!

தனக்கு முன்னால் இருப்பவர்கள் கைதட்டுவதற்காகப் பேசும் அரசியல் தான் விஜயின் அரசியல் என்று பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் பாஜக சார்பில் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கலந்துகொண்டு கொடியசைத்து வாகனத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராம.சீனிவாசன், தனக்கு முன்னால் இருப்பவர்கள் கைதட்டுவதற்காகப் பேசும் அரசியல் தான் விஜய் அரசியல் என்றும், அதைத் தாண்டித் தீர்க்கமான சிந்தனையோ பக்குவமோ அரசியல் தெளிவோ இல்லாதவர் விஜய் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *