
செங்கம் அருகே கோவில் திருவிழாவில் எண்ணெய் சட்டியிலிருந்து வெறும் கைகளால் வடை எடுக்கப்படும் வினோத வழிபாடு நடைபெற்றது. இதில் லட்ச ரூபாய் செலவு செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு 50 ரூபாய் கோவில் வடையில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதிசியம் நிகழும் எனப் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் வெகுவிமர்சியாக நடைபெறும் மயான கொள்ளை திருவிழா இம்முறை 58 ஆம் ஆண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
இந்த மயான கொள்ளை திருவிழாவை அப்பகுதி ஊர் பொதுமக்கள் ஒரு வாரதிற்கு மேலாக விரதம் இருந்து, பயபக்தியுடன் மசான கொள்ளை திருவிழாவை நடத்தி வருகின்றனர்.,
வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காள அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள் பாலித்தபின்பு,
கடந்த ஆண்டு அம்மனை தரிசித்து வேண்டுதல் கொண்டவர்கள், இந்தாண்டு நேர்த்திக்கடனாக உடலை வருத்தி முள்மீது படுக்கை விரித்து அதன் மீது படுத்தும், நெஞ்சின் மீது சுமார் 50 கிலோ எடை கொண்ட கல்உரலை வைத்தும், மஞ்சள் மற்றும் அரிசியை இடித்து நேர்தி கடன் செலுத்துதல்,
முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்துதல், உடல் முழுவதும் வேல் குத்தி மயில் தோகை அலகு குத்துதல், இவைகளுக்கு எல்லாம்உச்சக்கட்ட
கோவில் விழாவில் எடுக்கும் வடையை50 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
லட்ச ரூபாய் செலவு செய்தும் கிடைக்காத குழந்தை பாக்கியம், கோயிவில் விழாவில் கொதிக்கும் எண்ணெயில் எடுக்கும் வடையை உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிப்பதோடு,
இதே போன்று குழந்தை பாக்கியம் கிட்டி தங்களது நேர்த்திக்கடனை வீட்டில் உள்ள ஆண்கள் கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுக்கும் வினோத வழிபாடும் இக்கோவிலில் நடைபெறுகிறது.இந்த வினோத வழிபாடுகளைக் காண உள்ளூர் மட்டும் அல்லாது அதன் சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்.

