ஐதராபாத் – ஆந்திரா பேருந்து விபத்து..!

Advertisements
ஆந்திராவில் தனியார் பேருந்து மீது எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி மோதியதில் 14 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திரா நோக்கி தனியார் பேருந்து ஒன்று இரவு 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. மார்க்காபுரம் அருகே சென்ற போது, எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி பேருந்து மீது மோதியதில் பேருந்தில் இருந்த டீசல் டேங்கரில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதையடுத்து, பேருந்து முழுவதும் தீ பரவிய நிலையில் 14 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில், 25 க்கும் அதிகாமானவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என ஆஞ்சப்படுகிறது. தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *