கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்து அவதூறு பேச்சு !விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கைது !

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகளும், திமுக எம்பியுமான கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அண்மையில் காலமாகவே பாஜக நிர்வாகிகள் அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் புகாரின் பேரில் கருத்து பதிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று இரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலியவரதன், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகளும் திமுக எம்பியுமான கனிமொழி குறித்து அவதூறாக பேசி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *