“5 லட்சத்தைக் கடந்த காலிப் பணியிடங்கள்!” – அன்புமணி விளாசல்..!

Advertisements

தமிழக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் 5 லட்சத்தை கடந்ததுள்ளதால் இளைஞர்களுக்கு வேலை வழங்க கோரிக்கை பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்  தமிழக அரசுத் துறைகளில் மே மாதத்தின் கடைசி நாளில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர் என்று கூறினார். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்த பணியிடங்களில் 41.7 சதவீதம் காலியாக இருப்பது நிர்வாக செயல்பாடுகளை பாதிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாகும் நிலையில், அவற்றில் 10 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரப்பப்படுவதால் காலியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனால் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பது கடினமாகி வருவதால் அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்பி, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *