
எலான் மஸ்க் தனது குழந்தைப்பருவம் மகிழ்ச்சியற்றதாக இருந்தது எனக் கூற, அவரது தந்தை எரால் மஸ்க் மறுத்தார். எலான் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பள்ளிக்குச் சென்றதாகவும் கூறினார்.
தான் ஏழ்மையான நிலையில் வளர்ந்ததாகவும், தனது குடும்பம் நடுத்தர வருமானம் கொண்டதாக இருந்த போதும், தனது குழந்தை பருவம் மகிழ்ச்சியானதாக இல்லையென 2023ஆம் ஆண்டு டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
தனது தந்தை சிறிய எலக்ட்ரிக்கல், மெக்கானிக் பொறியியல் நிறுவனத்தை 20 முதல் 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்த போதும், வருமானம் குறைந்து 25 ஆண்டுகளாகத் திவால் நிலையில் இருந்தார் என்றும் தெரிவித்து இருந்தார்.
நிதி தேவைக்காகத் தனது அண்ணன் மற்றும் தன்னை நம்பி தந்தை இருந்ததாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனியார் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்கின் தந்தை எரால் மஸ்க், தனது மகன் எலான் மஸ்க் ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் பள்ளிக்குச் சென்று வந்ததாகக் கூறினார்.
மேலும், தனது 26 வயதில், 48 வயதுடையவரிடம் என்ன இருக்குமோ அனைத்து வசதிகளும் தன்னிடம் இருந்ததகாவும், சொந்தமாக வீடு, தனி விமானம் என அனைத்தும் இருந்ததாகக் கூறினார்.
இக்காணொலி அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் யார் கூறுவது உண்மையெனத் தெரியாமல் நெட்டிசன்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.
