Koyembedu : 134வது மனதின் குரல் நிகழ்ச்சியை பார்வையிட்ட  மத்திய அமைச்சர் எல். முருகன்.!

Advertisements

கோயம்பேட்டில் பிரதமர் மோடியின் 134வது மனதின் குரல் நிகழ்ச்சியை  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பார்வையிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலமாக நரேந்திர மோடி உரையாற்றினார். இதில் கோயம்பேடு தனியார் பூங்காவில் 134 வது மனதின் குரல் நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் எல். முருகன், கரு. நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். பின்னர் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை  சந்தித்து பேசினார்.

அப்போது கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் விளையாட்டு வீரர்கள் குருவிந்தர் சிங் மற்றும் அமினேஷ் ஆகியோர் தடகளப் போட்டிகளில் குறிப்பாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எவ்வாறு சாதனைகளைப் படைக்க முடியும் என்பது குறித்து பிரதமர் கலந்துரையாடியதாக கூறினார். கோடை வெப்பத்தைச் சமாளிக்க ஒவ்வொரு பிராந்தியத்திலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் குறிப்பாக நீர்மோர் அருந்துதல் மற்றும் அந்தந்த பகுதிகளுக்கு உரித்தான மாம்பழங்களின் சிறப்புகள் குறித்து பிரதமர் பேசியதை அவர் எடுத்துரைத்தார்.

மேலும் நாகர்கோவில் ஜெயகோபால் கரோடியா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் தினமும் 1 ரூபாய் வீதம் சேமித்து மொத்தம் 40 லட்சம் ரூபாயை ராணுவ வீரர்களின் நலனுக்காக வழங்கியதை அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாக குறிப்பிட்டார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *