Priyanka Gandhi Vadra: பாஜவுக்கு கேள்வி!

பாஜவுக்கு கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி!

நாட்டின் 84% தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர் பதவிக வகிக்க அனுமதி  மறுக்கப்படுவதேன் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் தற்போது ஆளும் கட்சியாக உள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்- பாஜக இடையேதான் நேரடிப் போட்டி இருந்து வருகிறது.சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

அப்போது பேசிய அவர் சத்தீஸ்கரில்   மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது, பீகாரைப் போல ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் பீகாரைப் போலவே  சத்தீஸ்கரிலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அம்மாநிலத்தில் தலித், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் என 84 % இருந்த போதிலும் அவர்கள் அதிகமாக முக்கிய பிரதிநிதிகளாக இல்லை ஏன் அவர்களுக்கு வழகப்படவில்லை. அவர்களுக்குத் தகுதி இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *