உழவர்களின் சாபம் திமுகவை சும்மா விடாது – அன்புமணி எச்சரிக்கை..!

நெல்லைக் கொள்முதல் செய்யாமல் அது முளைத்துப் போன நிலையில், நெல் கொள்முதலில் சாதனை எனக் கூறிவரும்  திமுக அரசை உழவர்களின் சாபம் சும்மா விடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது பெரும் சாதனை என்றும் திமுக அரசு கூறியுள்ளது.

காவிரிப் பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததாலும், மழையில் நனைந்து நெல் வீணாணதாலும் உழவர்கள் கண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

உழவர்களின் கண்ணீரைத் துடைக்க திமுக அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த காலப் புள்ளிவிவரங்களைக் காட்டுவதால் உழவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றுக்கும் உதவாத கணக்குகளைக் கூறுவதை விடுத்து நெல் கொள்முதலைத் தீவிரப்படுத்தி, உழவர்களின் கண்ணீரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *