Advertisements

வெப்பநிலை அதிகரித்து வருவதால், தனது சக குடிமக்கள் அனைவரும் இயன்றவரை அதிகப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வளைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் அன்றாட வாழ்வில் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் பல்வேறு சிரமங்களும் அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.
தனது சக குடிமக்கள் அனைவரும் இயன்றவரை அதிகப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தயவுசெய்து உங்கள் உடல் நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள் என்றும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, உடன் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தங்கள் வீடுகள் மற்றும் கடைகளுக்கு வெளியே மண் பானைகளில் தண்ணீர் வைத்து, அவ்வழியே செல்பவர் எவரும் அதைப் பருகும் வகையில் ஏற்பாடு செய்துள்ளவர்களை தான் பெரிதும் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisements



