Ankit Tiwari: 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

Advertisements

திண்டுக்கல்: லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

திண்டுக்கல்லில் டாக்டரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறையால் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அங்கித் திவாரியை போலீசார் கஸ்டடியில் எடுப்பதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனால் இன்று(டிச.,12) அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்துவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் மோகனா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 3 நாட்கள் விசாரணைக்குப் பின், வரும் டிச.,14ம் தேதி மாலை 5 மணிக்கு அங்கித் திவாரியை மீண்டும் ஆஜர்படுத்த திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *