திமுகவில் இணைகிறார் ராமதாஸ்..தொல் திருமாவுக்கு புகழாரம்…!!

Advertisements
மூத்த அரசியல் தலைவரான மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இரண்டாக உடைந்து இருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒரு பாட்டாளி மக்கள் கட்சியும் அவரது மகன் அன்புமணி தலைமையில் மற்றொரு பாட்டாளி மக்கள் கட்சியும்இயங்கி வருகிறது. தற்போது அன்புமணி தலைமையில் ஆன பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.  18 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் தருவதாக பேசப்பட்டிருக்கிறது .
இதற்கு இடையே பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்த நிலையில் அடுத்த கட்டமாக பிரேமலதா விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார்.  மருத்துவர் ராமதாஸ் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்கு பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி. இந்த கட்சியைப் பொருத்தவரையில் வன்னிய சமுதாயத்தினர் மிகப்பெரிய ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் .
இதேபோல்,  தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகப்பெரிய கட்சியாக பார்க்கப்படுகிறது. தலித் இனத்தவர்கள் ஒட்டுமொத்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆதரித்து வருகின்றனர் . இதனிடையே ஆங்காங்கே பல பகுதிகளில் வன்னியர்களுக்கும் தலித் இனத்தவர்களுக்கும் அவ்வப்போது மோதல் போக்கு ஏற்படுவதுண்டு கருத்து வேறுபாடுகளும் உண்டு .
இதன் காரணமாக,  பல இடங்களில் நடைபெற்ற காதல் திருமணங்கள் கொலை சம்பவங்களாகவும் மாறி இருக்கின்றன என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் , பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிரும் புதிருமாகவே காலம் காலமாக செயல்பட்டு வருகின்றன. தற்பொழுதுபாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது .
எனவே அதிமுக பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என ராமதாஸ் தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே , கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து ராமதாஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் திமுகவுடன் இணைவதாகவும் வன்னிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்று தர வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது .
இது தொடர்பாக , தொல் திருமாவளவனிடம் மு க ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தினார். கூட்டணிக்கு தொல் திருமா சம்மதம் தெரிவித்த போதிலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . இது மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு குரல் தெரிவித்தனர் .
எனவே ராமதாஸ் கூட்டணி தொடர்பான விவகாரங்கள் தள்ளி வைக்கப்பட்டன . இதனிடையே விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தற்பொழுது ஆங்காங்கே ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி விடுதலை சிறுத்தைகள் தொண்டர்களை அமைதிப்படுத்தி இருக்கிறார் .
இதனைத் தொடர்ந்து,  தற்பொழுது ராமதாஸ் மு க ஸ்டாலின் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றிருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது 25ஆம் தேதி வரை பொறுத்திருங்கள்.  25ஆம் தேதி அன்று கூட்டணி சம்பந்தமாகவும் மற்றும் தொகுதி பங்கீடு சம்பந்தமாகவும் பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து,  வருகிற 28ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் திமுகவில் இணைகிறார் இதற்கான அறிவிப்பு அன்றைய தினம் வெளியிடப்படுகிறது .
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளாமல் இருக்கும்படியான செயல்திட்டங்களும் வகுக்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனை பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அருள் MLA புகழாரம் சூட்டி பேசியிருக்கிறார் .
தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு , பின்பாக பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அப்போது அவர் பேசும் பொழுது திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது.  திருமாவளவன் எங்கள் ராமதாஸ் அய்யா பெறாத பிள்ளை போன்றவர் . அருந்ததியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தவர்.  ராமதாஸ் வன்னியர்களும் தலித் சமுதாய மக்களும் இரண்டு தண்டவாளமாக பார்த்துக் கொண்டிருப்பவர் ராமதாஸ்  .
அப்படி இருக்கும்பொழுது எங்களுக்கு யாருமே எதிரியை இல்லை. எதிரியைத்தான் நண்பனாக மாற்ற வேண்டும் எங்கள் அண்ணன் திருமாவளவன் எப்படி எதிரி என்று சொல்வீர்கள் அவர் எங்கள் அண்ணன் அவரும் ராமதாஸின் மகன் போன்றவர் என்று பேசினார் . அருள் எம்எல்ஏவின் இந்த பேச்சு திமுக கூட்டணிக்கு வெட்ட வெளிச்சமாக அஸ்திவாரம் போட்டதாக தெரிகிறது . கூட்டணி தொடர்பாக ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.  எனவே வருகிற 28ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் திமுகவில் இணைகிறார் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *