CCTV in Kerala Transport: அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்!

Advertisements

கேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். கேரளா போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு.

திருவனந்தபுரத்தில் கேரளா மாநிலத்தில் அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் வரும் 31-ஆம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என அம்மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜ் தெரிவித்துள்ளார். கேமராக்களை கொள்முதல் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டதாகவும் இனி இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும் எனத் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கையின் மூலமாகப் பேருந்தின் உள்ளேயும், பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்களை எளிதாகக் கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதவிர, வரும் நவம்பர்1-ஆம் தேதி முதல் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகங்களின் முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் சீட்பெல்ட் அணிய வேண்டும் எனவும் அமைச்சர் அந்தோணிராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *