32 ஆண்டுகளாக வாய்க்கால் தூர்வாருவதில் முறைகேடு..!

ஆனைமடுவு நீர்தேக்கத்தில் கடந்த 32 வருடங்களாக முன் பகுதியில் உள்ள வாய்க்காலை மட்டும் தூர்வாரி அதிகாரிகள் பில் போட்டு எடுத்துக் கொள்வதாக விவசாயிகள் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு நீர்தேக்கம் உள்ளது. இதில், ஆயக்கட்டு தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கிணறு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் விவசாய பாசனத்திற்கும் வேண்டி ஆனை மடுவு நீர் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

தொடர்ந்து மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் அரசாணை பிறப்பித்ததை தொடர்ந்து வலது புறம் கால்வாயின் மூலம் வினாடிக்கு 45 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பழைய புதிய ஆயக்கட்டு தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இது தொடர்பாக பேசியபோது, கடந்த 32 வருடங்களாக முன் பகுதியில் உள்ள வாய்க்காலை மட்டும் தூர்வாரி அதிகாரிகள் பில் போட்டு எடுத்துக் கொள்வதாக விவசாயிகள் பரபரப்பாக குற்றம் சாட்டினர்.
 தமிழக அரசுக்கு பிரதான கோரிக்கையாக வாய்க்கால்களை தூர்வார குழுக்கள் அமைக்க வேண்டும் என  கோரிக்கையாக விடுத்தனர். இதை, தவறும் பட்சத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *