
மாதவரம் அருகே பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே ரெட்டேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை, கல்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கேசவன் மற்றும் சுப்ரமணி சகோதரர்கள். இவர்கள் சென்னை மாதவரத்தியில் உள்ள தங்கள் பட்டா நிலம் தவறாக ‘நீர்நிலம்’ என வகைப்படுத்தப்பட்டதாக குற்றம்ச்சாட்டி, மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில், 1975ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பட்டா அடிப்படையில் தங்களுக்கு சொந்த மானது என தெரிவித்தனர். இதையடுத்து, ரெட்ஹில்ஸ் பாசனப் பிரிவு உதவி பொறியாளர் கடந்த மாதம் 19 ம் தேதி அன்று வெளியிட்ட கடிதத்தில், நிலம் நீர்நிலமாக கருதப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கிய உத்தரவுகளும் கருத்தில் கொள்ளப் படவில்லை என அவர்கள் மனுவில் குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் மூன்று ஜேசிபி வாகனங்களை கொண்டு வந்து, பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி காவல் துறையின் உதவியுடன் வீடுகளை இடித்து தள்ளினர். பட்டா நிலத்தில் பல வருடங்களாக வசிக்கும் மக்களின் வீடுகளை முன் அறிவிப்பின்றி இடிப்பது நியாயமா என பாதிக்கப்பட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


