
தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 2 மண்டலங்களின் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்க உள்ள நிலையில், 200 க்கும் மேற்பட்டத் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 14 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டத் தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கை விசாரித்தச் சென்னை உயர்நீதிமன்றம், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை இல்லை என்றும், கடைசியாகத் தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




