சிவகாசி பட்டாசுக்கு உலக அளவில் மவுசு.. அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிவிப்பு..!

Advertisements

வெடிகள் ஏற்றுமதிக்கான கொள்கையை உருவாக்க உள்ளதாகத் தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் சிவகாசிச் சட்டமன்ற உறுப்பினரும், மாநிலத் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா தலைமையில் வெடிகள் தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அப்போது வெடி உற்பத்தியில் உள்ள சிக்கல்கள், அவற்றை எளிமையாக்கும் நடைமுறைகள், விபத்தைத் தடுக்க வேண்டிய வழிகள் ஆகியன பற்றிக் கலந்துரையாடினர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, வெடிகள் ஏற்றுமதிக்கான கொள்கையைத் தமிழ்நாடு அரசு உருவாக்க உள்ளதாகத் தெரிவித்தார். முதலமைச்சர் ஜோசப் விஜயின் வழிகாட்டலின்படி இந்த ஏற்றுமதிக் கொள்கை உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்தக் கொள்கையின்படி வெடிகள் ஏற்றுமதியை முன்னெடுக்க உள்ளதாகவும், இதனால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உயரும் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *