காமன்வெல்த் போட்டி – தங்க பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர்!

காமன்வெல்த் பாரா தடகள பிரிவுப் போட்டியில் இந்தியாவின் ஷர்மிளா தன்கர் தங்க பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான பாரா தடகள பிரிவின் குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியாவின் ஷர்மிளா தன்கர் கலந்து கொண்டு, 9.81 மீட்டர் தூரத்திற்குக் குண்டு எறிந்து தங்க பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டிகளில் பாரா தடகள பிரிவில் பதக்கம் வெல்ல இந்தியாவின் 20 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, காமன்வெல்த் ஆடவர் உயரத் தாண்டுதல் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் சர்வேஷ் குஷாரே, 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

மேலும், ஆண்களுக்கான 79 கிலோ பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் அஜய பாபு மொத்தம் 149 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *